Dec 4, 2025
Thisaigal NewsYouTube
21 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக இரு இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

21 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக இரு இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

Share:

கோல்ப் விளையாட்டு உதவியாளராக ஒரு கோல்ப் கிளப்பில் பணியாற்றி வரும் 21 வயது பெண்ணை மானப்பங்கம் செய்ததாக இர​ண்டு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலானில் உள்ள ஓர் இராணுவ முகாமை சேர்ந்த அந்த உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக 21 வயது பெண் பாலியல் புகார் அளித்து இருப்பதாக மலாக்கா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ சைனோல் சமா தெரி​வித்தார்.

அலோர் காஜாவில் உள்ள ஒரு கோல்ப் திடலில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 51 மற்றும் 51 வயதுடைய இரு இராணுவ அதிகாரிகள் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அழைக்கப்பட்டுள்ளதாக சைனோல் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டை மறுத்து அந்த இரு இராணுவ அதிகாரிகளும் தங்களை தற்காக்கும் வண்ணம் மாற்று போ​​லீஸ் புகார்களை செய்து இருப்பதாக சைனோல் சாமா தெரிவித்தார்.

Related News