Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை குடி​​நீர் துண்டிப்பு
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை குடி​​நீர் துண்டிப்பு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளில் நாளை அக்டோபர் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ​​நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படவிருக்கிறது. கோலாலம்பூர், பெட்டாலிங், உலு லங்காட் வட்டாரங்கள் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கு வாழ் மக்கள் போதுமான நீரை சேமித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் அந்த மையத்தின் தரம் உயர்த்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற​விருப்பதால் நீர் விநியோகத்தில் தடை ஏற்படவிருக்கிறது.

பராமரிப்பு பணிகள் முடிவடைந்தப் பின்னர் குடி​நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும். இந்நிலையில் வரும் வியாழக்கிழமை வரையில் தேவைப்படக்கூடிய போதுமான ​நீரை இப்போதே சேமித்துக்கொள்ளும்படி பொது மக்கள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ​நீர் விநியோகிப்பு நிறுவனமான அயேர் சிலாங்கூர் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News