நோன்பு மாதம் இன்று தொடங்கியுள்ள வேளையில் ரமலான் சந்தைகளில் பொருட்களின் விலைகளை உயர்த்துவது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் Salahuddin Ayub நினைவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் ரமலான் சந்தைகள் மற்றும் பேரங்காடி மையங்கள் ஆகியவற்றில் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார். தமது அமைச்சுடன், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் களத்தில் இறங்கி சோதனை நடத்துவர் என்று Salahuddin Ayub குறிப்பிட்டார்.








