Sep 5, 2026
Thisaigal NewsYouTube
குற்றப்புலனாய்வில் நீண்ட அனுபவம் கோலா மூடா மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக கணேஷ் ஆறுமுகம்
தற்போதைய செய்திகள்

குற்றப்புலனாய்வில் நீண்ட அனுபவம் கோலா மூடா மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக கணேஷ் ஆறுமுகம்

Share:

கெடா மாநில காவல்துறையின் அதிகாரியான டிஎஸ்பி கணேஷ் ஆறுமுகம், சூப்ரிண்டென்டன் பதவிக்கு உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, கோலா மூடா மாவட்ட காவல்துறையின் துணைத் தலைவராகப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

அலோர் ஸ்டாரில் உள்ள கெடா மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற பதவி உயர்வு அணிவிக்கும் நிகழ்வில், கெடா மாநில காவல்துறை துணைத் தலைவர் டிசிபி பத்ருல்ஹிஷாம் பஹாருதின், கணேஷ் ஆறுமுகத்திற்கு புதிய பதவிக்கான அடையாளப் பட்டையை அணிவித்தார்.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சூப்ரிண்டென்டன் பதவிக்கு உயர்வுப் பெற்ற கணேஷ் ஆறுமுகம், அதனைத் தொடர்ந்து சுங்கைப்பட்டாணியை உள்ளடக்கிய கோலா மூடா மாவட்ட காவல்துறையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கணேஷ் ஆறுமுகம் கடந்த 2005ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக மலேசியக் காவல்படையில் இணைந்தார்.

2005 முதல் 2014ஆம் ஆண்டு வரை சபாக் பெர்ணாம் மாவட்ட காவல்துறையில் குற்றப்புலனாய்வு அதிகாரி மற்றும் மூத்த குற்றப்புலனாய்வு அதிகாரி ஆகிய பொறுப்புகளில் பணியாற்றினார்.

பின்னர், 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை கிள்ளான் செலாத்தான் மாவட்ட காவல்துறையில் மூத்த குற்றப்புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றினார்.

தொடர்ந்து, 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் D13 பிரிவில் பணியாற்றிய அவர், 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை லங்காவி மாவட்ட காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றி இருப்பத்தாகக் குறிப்பிடப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் துறையில் சுமார் இரண்டு தசாப்தங்களாக அனுபவம் பெற்றுள்ள கணேஷ் ஆறுமுகம், தற்போது கோலா மூடா மாவட்ட காவல்துறையின் துணைத் தலைவராகப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவரது பதவி உயர்வுக்கு கெடா மாநில காவல்துறை வாழ்த்து தெரிவித்ததுடன் புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு, காவல்துறையின் சேவையை மேலும் வலுப்படுத்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Related News