பத்து காஜா, ஜாலான் பூசிங் சமிக்ஞை விளக்குப் பகுதியில், ஆணிகளை இரைத்தவாறு காரில் சென்ற நபரைப் பேராக் மாநில போலீசார் கைதுசெய்துள்ளனர்.
45 வயதுடைய அந்த நபர், மன நிலை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று நம்பப்படுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மாட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
தவிர, அந்த நபர், பழுதடைந்த வாகனங்களை இழுத்துச் செல்லும் இழுவை லோரி பணியாளர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சாலையில் ஆணிகளை இரைத்தவாறு சென்ற அந்த நபரின் அராஜக செயல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்நபர் கடந்த ஏப்ரல் முதல் தேதி அதிகாலை மூன்று மணியளவில் lahat டில் உள்ள changkat larang என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக முஹம்மாட் யுஸ்ரி தெரிவித்தார்.

Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


