Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் காருடன் நீரில் மூழ்கி மாண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் காருடன் நீரில் மூழ்கி மாண்டார்

போகோக் சேனா , அக்டோபர் 03-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, ஆற்றில் பாய்ந்ததில் அந்தக் காரை செலுத்திய ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.

காருடன் நீரில் மூழ்கிய நபரின் உடலை மீட்பதற்கு போலீசார் தீயணைப்புமீட்புப்படையின் உதவியை நாடினர்.

இச்சம்பவம் இன்று காலை 10.25 மணியளவில் அலோர் ஸ்டார், தெலகா எமாஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று தீயணைப்பு, மீட்புப்படையின் கெடா மாநில செயலாக்கத் தலைவர் அப்துல் ஃபதா ஹம்தான் தெரிவித்தார்.

25 வயது முஹம்மது நூர் ஃபட்சில் முஸ்தபா என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது என்று அவர் மேலும் விவரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →