May 22, 2026
Thisaigal NewsYouTube
2 கிலோ போதைப்பொருளுடன் ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

2 கிலோ போதைப்பொருளுடன் ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 24 -

செதாபாக் வாங்சா மாஜு வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடவர் ஒருவரை கைது செய்ததன் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்தனர்.

இதுக்குறித்து கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.55 மணியளவில் 33 வயதுடைய உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக வாங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

இச்சோதனையின் போதுபு ரோட்டான் பெர்சோனா ரக காரிலிருந்து 2,006 கிராம் கஞ்சா, 7,346 வெள்ளி மதிப்பிலான 100 எரிமின் மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அஷாரி அபு கூறினார்.

மேலும் 43,000 வெள்ளி மதிப்புள்ள கார், போதைப்பொருள் மற்றும் வாகனம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு 50,404 வெள்ளியாகும் என்று அஷாரி அபு விவரித்தார்.

சுமார் 2,106 போதைப்பொருள் அடிமையாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் அந்நபரிடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக நேற்று ஓர் அறிக்கையில் அஷாரி அபு குறிப்பிட்டார்.

Related News