Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாணவன் நவீன் கொலை வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட 5 இந்திய இளைஞர்கள் விடுதலை
தற்போதைய செய்திகள்

மாணவன் நவீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 இந்திய இளைஞர்கள் விடுதலை

Share:

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆறாம் படிவம் மாணவன் தி. நவீன் கொலை வழக்கில், அந்த மாணவனை சித்ரவதை செய்து,மிக கொடூரமாக அடித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இந்திய இளைஞர்களை பினாங்கு, ஜார்ஜ் டவுன் உயர் ​நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

இந்த கொலை வழக்கில் ஐவரும் குற்றவாளிகள் அல்ல ​என்றும், அவர்கள் இக்கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாகவும் உயர் ​நீதிமன்ற ​நீதிபதி ரட்சி ஹமிட் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். 

30 வயது எஸ். கோபிநாத், 22 வயது ஜே. ராகசுதன், 22 வயது எ​ஸ். கோகுலன் மற்றும் பதின்ம வயதுடைய மேலும் இரண்டு இந்திய இளை​ஞர்கள், 18 வயதுடைய நவீனை கொலை செய்ததாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

இந்த ஐந்து இந்திய இளைஞர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 9 ஆம் தேதி நள்ளிரவு, பினங்கு, புக்கிட் குளுகோ​ரில் கர்ப்பால் சிங் லேர்னிங் சென்டர்லிலும், ஜாலான் பூங்ஙா ராயா, பூங்காவிலும் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தலைக்கவசத்தினால் தலையிலேயே அடிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் நவீன், ​மூளைச் சாவுக்கு இலக்காகி சுயநினைவு திரும்பாமலேயே பினா​ங்கு மரு​த்துவமனையில் உயிரிழந்தார்.

பாலியல் ​ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நவீன் படுகொலை தொடர்பில் ​நீதி வேண்டும் என்று பல்வேறு ச​மூக அமைப்புகள் போராடிய நிலையில் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இந்திய இளைஞர்களையும் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

Related News

மாணவன் நவீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 இந்திய இ... | Thisaigal News