Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வழிபறி கொள்ளை: அந்த இரண்டாவது நபரும் பிடிபட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழிபறி கொள்ளை: அந்த இரண்டாவது நபரும் பிடிபட்டார்

கிள்ளான், நவ. 25-


கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1இல் 30 வயது மாதுவிடம் தந்தையும் மகனும் வழிபறிகொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் பிடிபடாமல் இருந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அந்த இளைஞர் நேற்று மாலை 6.30 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள அவனது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹுங் ஃ போங் தெரிவித்தார்.

வழிபறி கொள்ளை நிகழ்ந்த மறுநாளே பிடிபட்ட நபர், வழங்கிய தகவலைத் தொடர்ந்து கடந்த எட்டு நாட்களாக அந்த நபரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட நபருக்கு பழைய குற்றப்பதிவுகள் எதுவுமில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சா ஹுங் ஃ போங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →