தானா மேரா, டிசம்பர்.01-
நபர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் கிளந்தான், தானா மேரா, குவால் பெரியோக், கம்போங் பாக்கு என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
மனைவிக்குக் காதலன் இருப்பதாகச் சந்தேகித்த அந்த ஆடவர், இந்தக் கொடூரச் செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியைக் கொன்றப் பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் 63 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி போலீசில் சரண் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.








