பேரங்காடி மையங்களில் உள்நாட்டு பச்சரிசி கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டதற்கு காரணம் பொய்யான தகவல்கள் பகிரப்படுவதே முக்கிய காணமாகும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அரிசி போதுமான கையிருப்பு இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தவறான செய்தியின் காரணமாக மக்கள் பீதியில் மூழ்கி அரிசியை வாங்கி குவிக்கும் போக்கில் இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே முன்னணி பேரங்காடி மையங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முகமட் சாபு விளக்கினார்.








