கிள்ளான், ஜனவரி.14-
கிள்ளான், கம்போங் ஜோஹான் செத்தியா வீடமைப்புப் பகுதிகளில் சில வீடுகளில் தீ வைத்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் சந்தேக நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
44 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர் 15 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








