Jun 6, 2026
Thisaigal NewsYouTube
'துரோக மரபணு' பாஸ் கட்சியை விட அம்னோவில் தான் அதிகம் - சாஹிட்டுக்கு ஹாடி பதிலடி
தற்போதைய செய்திகள்

'துரோக மரபணு' பாஸ் கட்சியை விட அம்னோவில் தான் அதிகம் - சாஹிட்டுக்கு ஹாடி பதிலடி

Share:

பாஸ் கட்சியை விட அம்னோ தான் துரோகத்திற்கு அதிகம் பெயர் பெற்றது என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமீடி வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று கருத்துத் தெரிவித்துள்ள ஹாடி அவாங், அம்னோவானது, முன்பு பாஸ் கட்சி மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமான ISA-ஐப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

ஆரம்பத்தில் அச்சட்டம் கம்யூனிஸ்ட் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ‘துரோக மரபணு’ -வானது பாஸ் கட்சியில் இல்லை என்றும், அம்னோவில் தான் உள்ளது என்றும் ஹாடி தெரிவித்துள்ளார்.

மலாய் மக்கள் இந்த சம்பவத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று ஹாடி தமது “மிண்டா பிரெசிடென் பாஸ்” கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 7-ஆம் தேதி, பாஸ் கட்சி குறித்துக் கருத்துத் தெரிவித்த சாஹிட், பாஸ் தனது இதயத்திலிருந்து "துரோகத்தை" அகற்றினால் மட்டுமே, அதனுடனான ஒத்துழைப்பை மீண்டும் புதுப்பிப்பது குறித்து அம்னோ பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு