Oct 9, 2026
Thisaigal NewsYouTube

காகிதத் தயாரிப்பு தொழிற்சாலை தீக்கிரையானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காகிதத் தயாரிப்பு தொழிற்சாலை தீக்கிரையானது

பூச்சோங், ஜூன்.21-

சிலாங்கூர், பூச்சோங், கம்போங் லெம்பா கின்ராராவில் உள்ள ஜாலான் லெம்பா கின்ராராவில் அமைந்துள்ள ஒரு காகிதத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மதியம் 12.14 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீ பரவியதில் தொழிற்சாலை 80 விழுக்காடு தீக்கிரையானது.

நல்வாய்ப்பாக, உயிருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா, ஶ்ரீ கெம்பாஙான், ஜாலான் பென்சாலா தீயணைப்பு - மீட்புப் படை உதவியுடன் தீயை முற்றாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →