பேராக், தைப்பிங், தாமான் கோத்தா வீரா கமுன்டிங்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கைவிடப்பட்ட நிலையில் புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அந்த சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த மாது ஒருவர் தெரிவித்தார். சாக்லெட் நிற துணியினால் சுற்றப்பட்டு, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் மீது எறும்புகள் மொய்துக்கொண்டிருந்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லா அப்துல் ஹமிட் குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த சிசு தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்லா அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


