கூலிம், ஜனவரி.03-
புதிய ஆண்டின் தொடக்கமாக பாடாங் செராய் தொகுதியில் GRAB, FOOD PANDA, SHOPEE RIDER, LALA MOVE என பொருட்கள் மற்றும் உணவுகள் அனுப்பும் தொழியில் செய்து வரும் 200 சாலை வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அவரின் சேவை மையம் சார்பாக மடானி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டத்தாக பாடாங் செராய் உள்துறை அமைச்சர் சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான சைஃபுல் அம்பார் அப்துல் அம்பார் தெரிவித்தார்.
சாலை வீரர்களின் சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்கு என்று இந்த உதவி பொருட்களை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் வழங்கிருப்பதாக சைஃபுல் அம்பார் தெரிவித்தார். இவர்களின் உழைப்பு உள்ளூர் மற்றும் நாட்டின் பொருளாத்தாரத்திற்கு ஒரு தூணாக இருந்து வருவதாக அவர் கூறினார்.

தொடர்ந்து, பொருள் அனுப்பும் சேவையில் ( P-hailing ) ஈடுபடும் அவர்களின் வாழ்க்கை நேரம் சாலையில் முடிவடைந்து விடுகின்றன. குடும்பத்துடன் நேரம் செலவுச் செய்வதற்கும் அல்லது அவர்கள் சரியான நேரத்தில் உணவு உண்பதற்கும் போதுமான நேரங்கள் கிடைப்பதில்லை. அத்துடன் உணவு அல்லது பொருட்களைச் சரியான நேரத்திலும் விரைவாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாலையில் மழை வெளியில் என்று பொருட்படுத்தாமல் ஆபத்தான சூழ்நிலையிலும் வேலை செய்யும் இவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் நோக்கமாகும் என்றால் சைஃபுல் அம்பார்.
ஆகவே, உள்துறை அமைச்சர் சேவை மையத்தின் பொருட்கள் அனுப்பும் சேவையில் தொழில் செய்பவர்களுக்கு முதல் கட்டமாக உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வுதவி தொடர்ந்து வழங்கப்படும் என்றார் சைஃபுல் அம்பார்.








