May 21, 2026
Thisaigal NewsYouTube
ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவது  அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவது அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல

Share:

நாட்டில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவது அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஊராட்சித்துறை, நகராண்மைக்கழகங்ள் மற்றும் மாநகர் மன்றப் பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்றத் தேர்தல்களின் வாயிலாக தேர்வு செய்யும் தேர்தல் நடைமுறை கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

இம்முறைக்கு பதிலாக ஊராட்சி மன்றங்கள், நகராண்மைக்கழகங்கள் மற்றும் மாநகர் மன்றங்களுக்கு நியமனங்கள் வாயிலாக பொறுப்பாளர்களை பதவிகளில் அமர்த்தும் நடைமுறையை அந்தந்த மாநில அரசாங்கம் மூலமாக கொண்டு வரப்பட்டதாக ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

எனினும் அந்த பழைய கால தேர்தல் நடைமுறைக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பது அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமை அல்ல என்பதை Nga Kor Ming தெளிவுபடுத்தினார்.

ஊராட்சி மன்றங்கள், நகராண்மைக்கழகங்கள் மற்றும் மாநகர் மன்றங்களில் தேர்தல் நடைமுறை வாயிலாக அவற்றின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது மூலம் அவர்கள் மக்களுக்கு ஆக்ககரமான முறையில் சேவை செய்வதற்கு கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதால் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைமுறை மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று டிஏபி கோலாலம்பூர் தலைவரும், செராஸ் எம்.பி.யுமான தான் கொக் வாய் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் அமைச்சர் ஙா கோர் மிங் பதில் அளித்துள்ளார்.

Related News