Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் Pisang Goreng போன்று கிடைக்கிறது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் Pisang Goreng போன்று கிடைக்கிறது

Share:

கோலாலன்பூர், ஜூலை 4-

நாட்டில் SYABU வகை போதைப்பொருள், Pisang Goreng பலகாரத்தைப் போன்று மிக எளிதாக கிடைப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கினபாத்தாங் எம்.பி. டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வகை போதைப்பொருள், மிக குறைந்த விலையில் மிக எளிதாக கிடைப்பதாக புங் மொக்தார் குறிப்பிட்டார்.

இது போன்ற சூழலின் காரணமாகவே நாட்டில் போதைப்பொருள் துடைத்தொழிக்கப்படுவது மிக சிரமமாக உள்ளது. எனவே 1983 ஆம் ஆண்டு போதைப்பித்தர்கள் மறுவாழ்வு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந்த சபா எம்.பி. அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் Pisang Goreng பலகாரத்தைப் போன்று மிக எளிதாகவும் வெறும் 30 வெள்ளி செலவிலும் கிடைக்குமானால் வருகின்ற இளைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று புங் மொக்தார் எச்சரித்துள்ளார்.

Syabu போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? எப்படி கிடைக்கிறது?

தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு ஏஜென்சியும், போலீசாரும் எங்கே, என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று புங் மொக்தார் கேள்வி எழுப்பினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்