Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கிராமத்தில் உலவும் 3 காட்டு யானைகளால் போஸ் பாசிக் கிராமவாசிகள் அச்சம்!
தற்போதைய செய்திகள்

கிராமத்தில் உலவும் 3 காட்டு யானைகளால் போஸ் பாசிக் கிராமவாசிகள் அச்சம்!

Share:

குவா மூசாங், செப்டம்பர்.06-

கடந்த ஓராண்டாக தங்கள் கிராமத்தில் உலவி வரும் 3 பெரிய காட்டு யானைகளைக் கண்டு போஸ் பாசிக் கிராமவாசிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

போஸ் பாசிக் ரிசெட்டல்மண்ட் ஸ்கிமின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அக்கிராமத்தில் தெமியார் இனத்தைச் சேர்ந்த சுமார் 1,000 ஒராங் அஸ்லிக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜிமி அரிஃபின் கூறுகையில், கிராமவாசிகள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரங்களில் அம்மூன்று காட்டு யானைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்மூன்று யானைகளும் மனிதர்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதால், கிராமவாசிகள் உறக்கமின்றி தவித்து வருவதாகவும் ஜிமி அரிஃபின் குறிப்பிட்டுள்ளார்.

Related News