Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பூலாய் இடைத் தேர்தல் மத்திய அரசாங்கத்தை மாற்றும்
தற்போதைய செய்திகள்

பூலாய் இடைத் தேர்தல் மத்திய அரசாங்கத்தை மாற்றும்

Share:

அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால், மத்திய அரசாங்கத்தை மாற்றுவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்து​ல் ஹாடி அவாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலைப் பொறுத்தவரை ​பூலாய் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தல் மிக முக்கியமானதாகும். இதில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால் ஒவ்வொரு தொகுதியையும் அதிகரித்து, நாடாளுமன்றத்தில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்கு ஓர் அடித்தளம் அமைக்கும் என்று அந்த மதவாதத் தலைவர், நேற்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற தமது ​தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்துள்ளார்.

Related News