பாஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கிளந்தான் முன்னாள் மந்திரி புசாருமான காலஞ்சென்ற நிக் அப்துல் அஸீஸ் நிக் மாடிற்கு மாமன்னரின் பிறந்த தினத்தையொட்டி டான்ஸ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது, அந்த ஆன்மிகத் தலைவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உயரிய அங்கீகாரமாகும் என்று நிக் அஸிஸின் மகன் நிக் மார் நிக் அஸீஸ் வர்ணித்துள்ளார்.
இந்த அங்கீகாரம் தங்கள் குடும்பம் எதிர்பார்க்காத ஒன்றாகும். ஆனால், அத்கைய ஓர் அங்கீாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. இது தமது தந்தை நிக் அப்துல் அஸீஸ் ஆற்றிய பணிக்கு கிடைக்கப்பெற்ற ஓர் உயரிய அங்கீகாரமாகும். இந்த உயரிய விருதை மாமன்னரிடமிருந்து பெறுவதற்கு தமது தந்தையார் உயிருடன் இல்லை என்றாலும் தமது குடும்பத்தினர் குறிப்பாக தமது தாயார் பெருமைப்படுவதாகநிக் ஒமார் குறிப்பிட்டார். நிக் அஸிஸ் சார்பாக அவரின் மனைவி புவான் ஶ்ரீ சபாரியா இஷாக் அந்த உயரிய விருதை மாமன்னரிடமிருந்து பெற்று கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


