கிள்ளான், நவம்பர்.11-
கடந்த வெள்ளிக்கிழமை, கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பப்படும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர், போலீசாரின் தேடப்பட்டு வந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
போலீசாரின் குற்றப்பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டதில் சம்பந்தப்பட் நபர் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் பல்வேறு குற்றப்பதிவுகள் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.
இன்று ஷா ஆலாம், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 34 வயதுடைய அந்த நபர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.








