Dec 2, 2025
Thisaigal NewsYouTube
உடல் பேறு குறைந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
தற்போதைய செய்திகள்

உடல் பேறு குறைந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Share:

போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டது, துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருட்கள் வைநத்திருந்தது உட்பட தம்மேல் சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளை, உடல் ஊனமுற்ற ஆடவர் ஒருவர், இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

35 வயதுடைய முகமட் ஃபிர்டாவூஸ் பைமான் என்ற அந்த ஆடவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி, சஸ்லினா ஷஃபீ முன்னிலையில் வாசிக்கப்பட்ட வேளையில், தாம் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக ஒப்புக்கொண்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி, பிற்பகல் 3.35 மணியளவில் ஜொகூர் பெங்கராங், லோட்டஸ் டெசாரு பண்டார் பெனாவாரில் அவரைக் கைது செய்ய முயன்ற லான்ஸ் கார்ப்ரல் அந்தஸ்தைக் கொண்ட முகமட் ஷஃபிக் நஸ்ரின் ரஸாலியைக் காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

Related News