May 24, 2026
Thisaigal NewsYouTube
150 CCக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

150 CCக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 02-

150 CC அல்லது அதற்கும் கூடுதலான வேக சக்தியைக்கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்கள், ABS எனும் பாதுகாப்பு சாதன முறையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் குறிப்பாக அவற்றின் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்கின்றவர்கள் எதிர்கொள்ளும் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் இந்த ABS முறையை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.
பிரேக் அழுத்தப்பட்ட அடுத்த கனமே மோட்டார் சைக்கிளின் இரண்டு சக்கரங்களும் ஓர் அங்குலம்கூட நகர முடியாமல் தானியங்கி முறையில் பூட்டிக்கொள்ளும் ABS முறையின் மூலம் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கையை பெருவாரியாக குறைக்க முடியும் என்று அகமட் ஜாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த ABS சாதனம் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை 31 விழுக்காடு குறைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன் இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்தார்.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது