Sep 28, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் புகைபிடித்த சுகாதாரத்துறை அதிகாரி: அமைச்சு  நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் புகைபிடித்த சுகாதாரத்துறை அதிகாரி: அமைச்சு நடவடிக்கை

Share:

உணவகங்களில் புகைபிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி, ரவாங் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நபர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்திய சுகாதார அமைச்சு, அந்த நபர் கோம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அரசு ஊழியர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, 'பொது சுகாதாரத்திற்கான புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024'-ன் கீழ் அந்த அதிகாரிக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே சட்டத்தை மீறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்