Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆருடங்களை உடனடியாக நிறுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

ஆருடங்களை உடனடியாக நிறுத்துங்கள்

Share:

நாட்டில் அண்மையில் மூன்று தொழில்முறை கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆருடங்கள் கூறுவதை பொது மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, இவ்விவகாரத்தில் அரண்மனையை தொடர்புபடுத்துவது உட்பட விசாரணையை பாதிக்கக்கூடிய ஊகங்களை உருவாக்க வேண்டாம் என்று ஐஜிபி எச்சரித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடபில் சமூக வலைத்தளங்களில் சில பொறுப்பற்ற தரப்பினர் பதிவேற்றம் செய்து வரும் குற்றச்சாட்டுகளை டான்ஸ்ரீ ரஸாருதீன் வன்மையாக மறுத்தார்.

இந்த தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.

Related News