ஜாசின், ஆகஸ்ட்.09-
காரும், லோரியும் மோதிக் கொண்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் மரணமுற்றார். அவரின் மகள் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இந்தச் சம்பவம், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், ஜாலான் ஞாலாஸ், கம்போங் போண்டோக் பாத்தாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த 63 வயது மூதாட்டி கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.
காரைச் செலுத்திய அவரின் 23 மகள் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று ஜாசின் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் செயலாக்கக் கமாண்டர் அஸ்மான் முகமட் டாவாம் தெரிவித்தார்.
இவ்விபத்தில் பழங்களை ஏற்றி வந்த லோரியுடன் பெரோடுவா விவா கார் மோதியதாக அவர் குறிப்பிட்டார்.








