Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாச்சாங்கில் 3 வங்காளதேசத் தொழிலாளர்கள் மரணம்
தற்போதைய செய்திகள்

மாச்சாங்கில் 3 வங்காளதேசத் தொழிலாளர்கள் மரணம்

Share:

மாச்சாங், பூலாய் சொன்டோங்கில் உள்ள கம்போங் மகாவுக்கு அருகே நெடுஞ்சாலை நிர்மாணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 3 வங்காள தேசத் தொழிலாளர்கள் மணலில் புதையுண்டு மரணமடைந்தனர்.

மச்சாங் காவல் துறைத் தலைவர் முகமட் முஹமாட் அட்லி மாட் டாவுட்டின் தகவலின்படி, பிற்பகல் 2.30 மணி அளவில் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்ததாக உறுதிப்படுத்தினார்.

30 வயது மிக்க அந்த 3 ஆண் தொழிலாளர்களும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மச்சாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர என அவர் மேலும் சொன்னார்.

Related News