Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நால்வர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நால்வர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.22
சிரம்பானில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நால்வர், விசாரணைக்கு பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரில் மூவர் அந்நிய நாட்டவர்கள் ஆவர். அவர்கள் மலேசிய குடிநுழைவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹட்டா செ டின் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட போலீஸ் அதிகாரி ஓர் அரசாங்க ஊழியர் என்பதால் அவரை பல கோணங்களில் விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக ஹட்டா செ டின் குறிப்பிட்டார்.

வர்த்தகர் கடத்தப்பட்டது தொடர்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News