Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேரங்காடியின் முன் கணவனும், மனைவியும் சண்டையிட்டுக் கொண்ட காட்சி வெறும் நடிப்பே

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரங்காடியின் முன் கணவனும், மனைவியும் சண்டையிட்டுக் கொண்ட காட்சி வெறும் நடிப்பே

ஷா ஆலாம், ஜூன்.07-

சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலான, பேரங்காடி முன்புறம், மனைவி வைத்திருந்த தள்ளுவண்டியில் உள்ள பொருட்களை எடுத்துத், தூக்கி எறிந்து, கணவன் வாய்ச் சண்டையில் ஈடுபட்டு ரகளைப் புரியும் காட்சி வெறும் நடிப்பாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கணவன், ஆவேசமாக மனைவியைத் திட்டுவதும், கோபத்தை அடக்க முடியாமல் பொருட்களைத் தூக்கி எறிந்து, மனைவியிடம் எகிறி பாய்வதும், ஆவேசமிக்க கணவனை இருவர் ஓடி வந்து தடுப்பதும் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்தக் காட்சி, பலரின் கவன ஈர்ப்பாக மாறியது.

எனினும் அது உண்மையான சண்டை அல்ல. மாறாக, எஸ்டி ரோஷாம் மார்ட் என்ற பேரங்காடியைப் பிரபலத்தும் நோக்கில் இருவர் நடித்தனர்.

அந்தக் காணொளி, கணவன், மனைவிக்கும் இடையிலான ஒரு சண்டையைப் போல சித்தரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது என்று அந்த பேரங்காடியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான டத்தோ ரோஷாம் நோர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை