அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாகின் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும் மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எந்தவொரு நபரின் விசாரணை அறிக்கையிலும் தாங்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததில்லை என்று அவர் விளக்கினார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எஸ்பிஆர்எம் மின் விசாரணைக்கு ஆளாகியுள்ள தமது 5 சிறப்பு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை கடந்த மே மாதம் மனித வள அமைச்சர் சிவகுமார் உறுதிபடுத்தினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


