குவாந்தான், செப்டம்பர்.11-
குவாந்தான், பண்டார் இண்டேரா மாஹ்கோத்தா ஜெயாவில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது வீட்டை இழந்த நோர் ரிஸா எம்போக் என்ற பெண்ணுக்கு பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்த நிதி உதவியை, பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபார்ஹான் ஃபௌஸி இன்று அப்பெண்ணை நேரில் சந்தித்து வழங்கினார்.
அப்பெண் வசித்து வந்த வீட்டின் பெரும்பான்மையான பகுதிகள் தீயில் சேதமடைந்திருந்தாலும் கூட, அல்லாஹ்வின் அருளால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அஹ்மாட் ஃபார்ஹான் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகவல் அன்வாரின் அதிகாரப்பூர்வ முகநூலும் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








