கோலாலம்பூர், செப்டம்பர்.03-
அரசாங்கத்திற்கு எதிராக நிந்தனைத்தன்மையில் அறிக்கை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வலைப்பதிவாளர் பாபாகோமோ எனப்படும் வான் அஸ்ரி வான் டெரிஸை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
42 வயதுடைய பாபாகோமோவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நிந்தனைக் குற்றச்சாட்டை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி கண்டுள்ளதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி அமினா கஸாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








