May 22, 2026
Thisaigal NewsYouTube
நாயை அடித்து காயப்படுத்திய ஆடவர் விசாரணை
தற்போதைய செய்திகள்

நாயை அடித்து காயப்படுத்திய ஆடவர் விசாரணை

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி 25 -

வளர்ப்பு நாயை ஒருவர் அடித்து கொடுமைப்படுத்திய காணொளி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை முகநூல் அகப்பக்கத்தில் பரவலாக வைரலாகியத்தை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை பார்த்ததாக 49 வயதுடைய மாது ஒருவர் அளிக்க பெற்ற புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஶ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மோஹாமாட் சோஹைமி ஈசாக் தெரிவித்தார்.

29 நிமிட காணொளி ஒன்று மலேசியா டோக்ஸ் டிசெர்வ் பெட்டர் என்ற முகநூல் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக முகமட் சொஹைமி கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 9:30 மணியளவில் தாமான் ஜோகூர் ஜாயா வில் இச்சம்பவம் நடந்திருப்பது அந்த காணொளி மூலம் கண்டறியப்பட்டதாக மோஹாமட் சொஹைமி விளக்கினார்.

Related News