Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு அந்நிய நாட்டவர்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு அந்நிய நாட்டவர்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி அபராதம்

கோத்தா திங்கி,அக்டோபர் 07-

கடந்த சனிக்கிழமை ஜோகூர்,கோத்தா திங்கியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான Pan Asia அனைத்துலக ஓட்டப்போட்டியில் ஆண்களின் கண்களை உறுத்தும் வகையில் பெண்களின் ஆடைகளை அணிந்து, ஆபாசமாக நடந்து கொண்ட குற்றத்திறகாக இரண்டு அந்நிய நபர்களுக்கு கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

தைவானைச் சேர்ந்த 66 வயது ஆர்தர் வாங் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 70 வயது பிரசாத் பாபோலி என்ற அந்த இரண்டு நபர்களும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நூர் கலிதா ஃபர்ஹானா அபு பக்கர் இத்தண்டனையை விதித்தார்.

அபாரத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிப்பதாக தமது தீர்ப்பில் மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

Pengerang மாவட்டத்திற்கு உட்பட்டஜாலன் தேசாரு, ஜாலான் உதாமா -வில் உள்ள தாமரை தேசரு ஹோட்டல் வளாகத்தில் அவ்விருவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவின் கலாச்சார கூறுகள் பற்றி தங்களுக்கு தெரியாததால் இவ்வாறு நடந்து கொண்டதாக பணி ஓய்வுப்பெற்றவர்களான அவ்விருவரும் நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →