Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பிரதமரின் புதிய புத்தகம் வெளியீடு: மாணவர்களுக்காக காப்புரிமை நிதி அர்ப்பணிப்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமரின் புதிய புத்தகம் வெளியீடு: மாணவர்களுக்காக காப்புரிமை நிதி அர்ப்பணிப்பு!

கோலாலம்பூர், டிசம்பர்.07-

சவால்கள் நிறைந்த தற்போதைய காலத்தைப் பற்றி விவாதிக்கும் 'Rethinking Ourselves: Justice, Reform and Ignorance in Postnormal Times' என்ற தனது புதிய புத்தகத்தை இன்று வெளியிட்டார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். 240 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், சமூக நீதி, சீர்திருத்தம், நிச்சயமற்ற ஒரு காலமான Postnormal Times சகாப்தத்தை எதிர்கொள்வது குறித்த அவரது சிந்தனைகளையும் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஒரு பரபரப்பான அறிவிப்பாக, இந்தப் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் காப்புரிமைத் தொகை முழுவதையும் நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கவுள்ளதாக அன்வார் அறிவித்தார். புத்தக வெளியீட்டு விழாவில், தொடக்கத்தில் புத்தகம் வாங்கிய 50-க்கும் மேற்பட்டோருக்குப் பிரதமரே கையெழுத்திட்டுப் படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →