Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதற்கு விண்ணப்பம்: விசாரணைக்கு அனுமதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதற்கு விண்ணப்பம்: விசாரணைக்கு அனுமதி

புத்ராஜெயா, டிச.13-


இஸ்லாமிய சமயத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி கேட்டு, விண்ணப்பம் செய்துள்ள சரவாக்கை சேர்ந்த 27 வயது பெண் ஒருவரின் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்தில் செவிமடுப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அ ளித்தது.

சம்பந்தப்பட்ட பெண் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தில் அடிப்படை தகுதிபாடு இருப்பதாக மூவர் அ டங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி சுபாங் லியான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தாம் தொடுத்துள்ள வழக்கு மனுவை விசாரணை செய்யக்கோரி, அந்தப் பெண் தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்தது மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி தவறு இழைத்துள்ளார் என்று நீதிபதி சுபாங் லியான் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

அந்த பெண் செய்து கொண்ட விண்ணப்பத்தில் முன்வைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் வாதங்களை மிக அற்பமானவையாக கருத முடியாது. காரணம், அந்த ஆதாரங்களில் அடிப்படை தகுதிபாடு இருப்பதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →