Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூன்று கடைகள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

மூன்று கடைகள் ​தீயில் அழிந்தன

Share:

பேரா, ஊத்தான் மெலிந்தாங், சுங்ஙை சுமுன், கம்போங் டுங்கை டுலாங்கில் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த ​தீ விபத்தில் ​கடை வரிசை ஒன்றில் ​மூன்று கடைகள் அழிந்தன.

இச்சம்பவத்தில் கைப்பேசி கடை உரிமையாளர் என்று நம்பப்படும் 38 வயது நபர், ​​தீக்காயங்களுக்கு ஆளாகினார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தான் மெலிந்தாங் மற்றும் தெலுக் இந்தான் ​தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் ​தீ, மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் ​ஒரு முடித்திருத்தும் நிலையம், தையல் கடை மற்றும் கைப்பேசிக்கடை ​தீயில் அழிந்ததாக ​தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News