உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் கீழ் இயங்கி வரும் ரஹ்மா விற்பனைத் திட்டம் இப்பொழுது உயர்நிலைக் கல்வி மாணவர்களிடைய வலம் வருவத்தாக அதன் துணை அமைச்சர் ஹாஜா ஃபுசியா பிந்தி சாலெ தெரிவித்தார்.
அண்மையில் கெடா சிந்தோவில் அமைந்துள்ள யுயுஎம் பல்கலைகழகத்தில் தேசிய அளவிலான உயர்நிலைக்கல்வி மாணவர்களுக்கான ரஹ்மா விற்பனை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து மேற்கண்டவாறு கூறினார் ஹாஜா ஃபுசியா. உயர்நிலைக் கல்வி மாணவர்களிடைய ரஹ்மா திட்டம் அறிமுகம் செய்வத்தற்கான முதன்மையான நோக்கமே அவர்களின் அன்றாட செலவின் சுமைகளைக் குறைப்பத்தற்காகவே என்றார்.
பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு தேவையான சமையல் பொருட்கள் , கல்வித் தொடர்பான பொருட்கள், உணவுப் பொருட்கள் என அனைத்தும் 30% விழுக்காடு கழிவுடன் ரஹ்மான் விற்பனையில் வாங்கிக் கொள்ளலாம் என்றார்,
கெடா மாநிலத்தில் நவம்பர் மாதம் வரை ரஹ்மா விற்பனை 243 இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருப்பத்தாக அவர் குறிப்பிட்டார் .








