Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மித்ராவின் டையலிசிஸ் உதவித் தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மித்ராவின் டையலிசிஸ் உதவித் தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன

கோலாலம்பூர், ஜூன்.27-

இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் 2025 ஆம் ஆண்டுக்கான டையலிசிஸ்
உதவித் தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள், தற்போது மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. டையலிசிஸ் உதவித் தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நேற்று ஜுன் 26 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளதாக மித்ரா அறிவித்துள்ளது.

ஜுன் 26 ஆம் தேதி தொடங்கி, ஜுலை 30 ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த டையலிசிஸ்
நிதி உதவியைப் பெறுவதற்கான வழிகாட்டல் குறித்த விவரங்கள் மித்ராவின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →