குவாந்தான், ஜாலான் சுங்கை சோய் இல் உள்ள பெட்ரோனாஸ் ந்ண்ணெய் நிலையத்தின் அருகே 14 மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காரை மோதியதில் அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிற்பகல் 3.00 மணிக்கு நடந்த அச்சம்பவத்தின்போது சுங்கை சோய் இடைநிலைப்பள்ளி பயிலும் அம்மாணவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து எதிரே வந்த புரோடுவா மைவி வகைக் காரை மோதினார் என குவாந்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
அம்மாணவர் சற்றும் எதிர்ப்பாராத நிலையில் சாலையின் இடது புறத்தில் இருந்து வெளியே வந்தபோது நேரே வந்த காரை மோதி இருக்கிறார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகாக, மாணவரின் சடலம் தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.








