Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு பதற்றம்: பினாங்கு கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள்
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்: பினாங்கு கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள்

Share:

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய கடல்சார் வழித்தடங்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதன் விளைவாக பினாங்கு மாநிலத்தின் சுற்றுலா கப்பல் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பினாங்கு துறைமுக ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

சுவெட்டன்ஹாம் கப்பல் முனையத்திற்கு வரவிருக்கும் கப்பல்களின் அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்படுபவை உள்ளதா என்பதை அறிய தினசரி மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருவதாக அதன் தலைவர் டத்தோ யோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த பிராந்திய மோதலானது, உலகளாவிய கடல்சார் தளவாடங்கள், குறிப்பாக கப்பல் வழித்தடங்கள் மற்றும் விமான போக்குவரத்துத் தொடர்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. MSC கப்பல்,TUI கப்பல் மற்றும் AIDA கப்பல் போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே 2025/26 குளிர்கால பருவத்திற்கான தங்கள் பயணத் திட்டங்களை மாற்றியமைக்கவோ அல்லது ரத்து செய்யவோ தொடங்கியுள்ளன.

வழக்கமாக சூயஸ் கால்வாய் வழியாக மலாக்கா நீரிணையை அடையும் கப்பல்கள், தற்போது ஆப்பிரிக்காவின் 'நம்பிக்கை முனை' வழியாகச் சுற்றிக்கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நீண்ட பயணங்களால் பினாங்கு நோக்கி வரும் சர்வதேச கப்பல்களின் வருகை நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று டத்தோ யோ தெரிவித்தார்.

Related News