May 4, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரின் லீ சியன் லூங் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வருகை
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரின் லீ சியன் லூங் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வருகை

Share:

சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான லீ சியன் லூங், 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக, மலேசியாவின் பகாங் மற்றும் திரங்காணு மாநிலங்களுக்கு வருகை புரியவுள்ளார்.

இன்று மே 4-ஆம் தேதி தொடங்கும் அவரது பயணமானது, மே 8-ஆம் தேதி நிறைவடைவதாக பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை விடுத்துள்ளது.

மேன்மை தங்கிய பகாங் மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவரது துணைவியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோரின் அழைப்பை ஏற்று லீ சியன் லூங்-இன் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பகாங் சுல்தானின் அரச விருந்து உபசரிப்பில் தனது மனைவி ஹோ சிங் -உடன் கலந்து கொள்ளும் லீ சியன் லூங், பின்னர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்-ஐ சந்திக்கிறார்.

அவருடன் மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

மேலும், திரங்காணு மாநில பயணத்தின் போது, அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் மற்றும் மாநிலத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிங்கப்பூரின் லீ சியன் லூங் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசிய... | Thisaigal News