May 4, 2026
Thisaigal NewsYouTube
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை
தற்போதைய செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை

Share:

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மலேசிய நேரப்படி 12.42 மணியளவில், அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி

தவெக 103 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதிமுக 80 தொகுதிகளிலும், திமுக 48 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றது.

தற்போதைய வாக்கு நிலவரப்படி, சென்னையில் 16 இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

Related News

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்... | Thisaigal News