Jun 24, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் விவகாரத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை / அம்னோ நிலைப்பாட்டிற்கு அன்வார் பதில்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசியல் விவகாரத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை / அம்னோ நிலைப்பாட்டிற்கு அன்வார் பதில்

Share:

மாநில எதிர்க்கட்சியாகச் செயல்பட அம்னோ தயாராக இருந்தபோதிலும், நெகிரி செம்பிலானில் நிலவும் சூழல் இன்னும் தெளிவாக இல்லை என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி, துவான்கு முஹ்ரிஸ் துவான்கு முனாவீர் வெளிப்படுத்திய கருத்துக்களையும் கவனத்தில் கொண்டதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பிரச்சினையை தீர்க்கமான நெருக்கடியாக கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரச வழிகாட்டுதல்கள் மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு இணங்க, முடியாட்சியைப் பேணிக்காப்பதிலும், மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும் ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தாங்கள் அரச ஆணையை மதித்து நடப்பதாலும், மந்திரி பெசார் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பதன் மூலம் நிலைத்தன்மையை உறுதி செய்ய முயல்வதாலும், அத்தகையதொரு கேள்விக்கே இடமில்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தல் வரை, எதிர்க்கட்சியில் இணைவது உட்பட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநிலப் பிரிவு தயாராக இருப்பதாக நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலையஸ், சனிக்கிழமையன்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சொக்சோ கோரிக்கைகள் 2 முதல் 3 நாட்களில் தீர்வு: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

சொக்சோ கோரிக்கைகள் 2 முதல் 3 நாட்களில் தீர்வு: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

2027: 6 வயது மாணவர்களின் விண்ணப்பங்கள் குறைந்ததால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறைப்பு!

2027: 6 வயது மாணவர்களின் விண்ணப்பங்கள் குறைந்ததால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறைப்பு!

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு