இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்.26-
பகடிவதை எதிர்ப்புச் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பில் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் டவுன்ஹால் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டத் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.
பகடிவதை தொடர்பான பிரச்னையில் மாணவர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களின் கருத்துகளையும் கண்டறிய அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதன் தொடர்பில் பள்ளிகளிலும் மாணவர்களுடன் டவுன்ஹால் சந்திப்பு நடத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ அஸாலினா குறிப்பிட்டார்.








