Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பயணப்பெட்டிக்குள் சடலம், சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பயணப்பெட்டிக்குள் சடலம், சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

கோலாலம்பூர், டிச.10-


வீடமைப்புப்பகுதி ஒன்றில் கால் வாய் அருகில் சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்ட பயணப்பெட்டிகுள் சடலம் கிடந்தது அப்பகுதியில் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது..

காஜாங், செராஸ், தாமன் செராஸ் பெர்டானாவில் இன்று காலையில் ஒரு சூட்கேஸ் வடிவில் காணப்பட்ட பயணப்பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட பொது மக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பெட்டிக்குள் புழுக்கள் மொய்ப்பதை கண்ட பொதுமக்கள், அது மனிதரின் உடல் அவயமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். அந்தப் பயணப்பெட்டிக்குள் மனித உடல் அவயங்கள் இருப்பது பின்னர் தெரியவந்ததுள்ளது

அந்த பயணப்பெட்டி குறித்து 23 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கானை தொடர்புகொண்டு கேட்ட போது, இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், கருத்துரைக்க மறுத்து விட்டார். காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →