கோலாலம்பூர், செப்டம்பர்.11-
இன்று வியாழக்கிழமை அதிகாலை, ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மலேசியக் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், மொத்தம் 125 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 81 ஆண்களும், 43 பெண்களும், 1 குழந்தையும் இருந்ததாக கோலாலம்பூர் மாவட்ட குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் கள்ளக் குடியேறிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த தொடர் புகார்களையடுத்து, இரண்டு வாரங்கள் புலனாய்வுக்குப் பிறகு, தாங்கள் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டதாகவும் அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








