பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில், ஓர் அலங்காரப் பொருளாக அம்னோ இருந்து விடக்கூடாது என்று முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், இனம் மற்றும் நாடு ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவதிலும் கண்டிப்பதிலும் அம்னோ அஞ்சக்கூடாது என்று முன்னாள் அம்னோ உதவித் தலைவருமானஇஸ்மாயில் சப்ரி வலியுறுத்தினார்.
மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் போது அவைக் குறித்து நடப்பு அரசாங்கத்தில், அம்னோ இளைஞர் பிரிவு கேள்வி எழுப்புவதிலும், குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் என்ன தவறு என்று இஸ்மாயில் சப்ரி வினவினார்.
ஒரு காலத்தில், துணிச்சல் மிகுந்த பிரிவாக காணப்பட்ட அம்னோ இளைஞர் பிரிவு, அத்தகைய ஆற்றல் வாய்ந்த கலாச்சாரத்தை இழந்து வருவது வருத்தமளிக்கிறது என்று பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்ட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


