Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கடனுக்கான மாதாந்திரத் தவணையை ஒத்திவைக்க பேங்க் ராயாட் அனுமதி
தற்போதைய செய்திகள்

கடனுக்கான மாதாந்திரத் தவணையை ஒத்திவைக்க பேங்க் ராயாட் அனுமதி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

நாடு முழுவதும் வெள்ளப் பாதிப்பில் சிக்கிய தங்கள் வாடிக்கையாளர்களின் கடனுக்கான மாதாந்திர தவணையை 6 மாத காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு பேங்க் ரக்யாட் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்த Moratorium சலுகையானது, தனிப்பட்டக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், மைக்ரோ கடன், அடகுப் பொருள் கடன் மற்றும் கிரேடிட் கார்டு கடன் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று பேங்க் ரக்யாட் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், இந்த Moratorium சலுகையைப் பெறுவதற்கு வங்கி நிர்வாகத்துடன் [email protected] என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யலாம் என்று அந்த முன்னணி வங்கி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News